உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் 8%-ஐ தாண்டலாம்.. EMI அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா?

விரைவில் உங்களது மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் கூடுதலாக மாத தவணை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த மே 4, 2022ல் இருந்து 0.9% வட்டி அதிகரித்துள்ளது.

இந்த முறையும் வட்டி விகிதம் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தவணை தொகையானது மேலும் அதிகரிக்கலாம்.

4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

ஏற்கனவே வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் வட்டி விகிதமானது அதிகரிக்கலாம். ஏற்கனவே 6.72% வட்டி விகிதமானது, 7.62% ஆக அதிகரித்துள்ளது. இத காரணமாக மாத தவணையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

பிரச்சனை

பிரச்சனை

ஆகஸ்ட் 3 அன்று தொடங்கியுள்ள மத்திய வங்கி கூட்டம் மூன்று நாள் தொடரவுள்ளது. இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் மற்றும் பிற எம்பிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பணவீக்கத்தினால் பிரச்சனை அதிகளவில் இருந்து வரும் நிலையில், மக்கள் ஏற்கனவே பிரச்சனையில் இருந்து வருகின்றனர்.

நிபுணர்கள் எதிர்பார்ப்பு
 

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

உயர் பணவீக்கம் இருந்து வரும் நிலையில் வல்லுனர்கள் வட்டி விகிதம் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கின்றனர். இது 35 – 50 அடிபப்டை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர். ரெப்போ விகிதம் அதிகரிக்கும் நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இது மாத தவணை அதிகரிக்கலாம்.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

உதாரணத்திற்கு 50 செலுத்த வேண்டிய நிலுவை கடன் உள்ளது என வைத்துக் கொள்வோம். இதன் காலம் 20 வருடம் என வைத்துக் கொள்வோம். இதன் தற்போதைய வட்டி விகித, 7.65% என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் 50 அடிப்படைபுள்ளிகள் அதிகரித்து, 8.15% ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், இது கடன் செலுத்தும் கால அவகாசத்தினை இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை அதிகரிக்கலாம். அது மட்டும் அல்ல, வட்டி விகிதமும் கூடுதலாகும். இதனால் கூடுதலாக வாடிக்கையாளர் பணம் சேலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI’s MPC meet: your home loan interest rate may jump 8% above: EMIs also increase

RBI’s MPC meet: your home loan interest rate may jump 8% above: EMIs also increase/உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் 8%-ஐ தாண்டலாம்.. EMI அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.