வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க கோரி, தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு மத்திய சட்டம்,நீதித்துறை அமைச்சகத்தின் செயலாளர் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த , எஸ்.ஏ.பாப்டே, ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி. ரமணாவின் பெயரை, அவர் பரிந்துரைத்திருந்தார். அது ஏற்கப்பட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48 வது தலைமை நீதிபதியாக, நீதிபதி, என்.வி. ரமணா கடந்தாண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பியுள்ள தகவலில் உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். அதன்படி ரமணா பரிந்துரைக்கும் நீதிபதி பெயரை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளிப்பார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதி பதவியேற்பார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement