பிரித்தானிய அரசு தகவல் தொடர்பு தலைமையக உளவு ஏஜன்சி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் தேர்தலின் அடுத்த கட்ட வாக்களிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு தகவல் தொடர்பு தலைமையகம், (The Government Communications Headquarters – GCHQ), உலகம் முழுவதிலிமிருந்து தகவல்களை சேகரித்து, பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதாகிலும் உள்ளனவா என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது, பிரித்தானிய பிரதமர் தேர்தலின் அடுத்த கட்ட வாக்களிப்பில் ஹேக்கர்கள் தலையிடக்கூடும் என பிரித்தானிய அரசு தகவல் தொடர்பு தலைமையக உளவு ஏஜன்சி எச்சரித்துள்ளது.
File photo: Reuters
மேலும், தபால் வாக்குகளும் தாமதமாகி, ஆகத்து 11ஆம் திகதி வாக்கில்தான் வாக்குகள் எண்ணும் இடத்தை வந்தடையும் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 160,000 உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, உளவு ஏஜன்சியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தேர்தலின் அடுத்த கட்ட வாக்களிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நிற்கும் இறுதி வேட்பாளர்களில், ரிஷி பின்தங்கியுள்ளார், லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.