கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழக அரசால் நடத்தப்படும் எந்த பொதுவிழா கொண்டாட்டங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக அரசால் நடத்தப்பட இருக்கும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது பொது மக்களும் பங்கேற்கலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி சாலையில் போலீஸ் அணிவகுப்பும் மற்றும் கோட்டை கொத்தளத்தில் இரண்டாவது ஆண்டாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடி ஏற்று உள்ளார். பொதுமக்களை அனுமதித்த போதும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM