திருமணம் மூலம் சுவிஸ் குடியுரிமை பெற்ற வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் தன் கணவரை விவாகரத்து செய்ததால் அவர் வாழ்வே மாறிப்போனது.
2010ஆம் ஆண்டு தன்னை விட 15 வயது மூத்தவரான சுவிஸ் குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் மொராக்கோ நாட்டவரான ஒரு இளம்பெண். அதன் மூலம் அவருக்கு 2015ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை கிடைத்தது. சுவிஸ் குடியுரிமை கிடைத்த சில மாதங்களில் தன் கணவரை விவாகரத்து செய்தார் அந்தப் பெண்.

ஆகவே, விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள் அதிகாரிகள். விசாரணையின் முடிவில், அந்தப் பெண் சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவதற்காகவே சுவிஸ் நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்ததாக அவர்கள் முடிவு செய்தார்கள்.
Photo by Fabrice COFFRINI / AFP
அதைத் தொடர்ந்து, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் அந்தப் பெண்ணின் சுவிஸ் குடியுரிமையை ரத்து செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது குடியுரிமை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அந்தப் பெண் நிர்வாக நீதிமன்றம் ஒன்றில் மேல்முறையீடு செய்ய, அந்த நீதிமன்றம் புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகத்தின் முடிவு சரியானதே என தீர்ப்பளித்தது. எனவே, அந்தப் பெண் பெடரல் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், பெடரல் நீதிமன்றமும், புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகத்தின் முடிவு சரியானதே என்று கூறிவிடவே கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அந்தப் பெண்.
இப்படி புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் குடியுரிமையை ரத்து செய்வது இது முதல் முறையல்ல. ஆண்டுதோறும் சராசரியாக இப்படி விவாகரத்து செய்யும் 50 பேரின் குடியுரிமைகளை அந்த அமைப்பு ரத்து செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.