நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் வங்கிகள் தனியார்மயமாக்க மசோதா? அமைச்சர் விளக்கம்!

மத்திய அரசு ஏற்கனவே சில பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கி உள்ள நிலையில் மேலும் சில பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடரிலேயே சில பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது குறித்த மசோதா தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கே காரத் அவர்கள் என்ன பதில் கூறியுள்ளார் என்பதை தற்போது பார்ப்போம்.

சென்னை-மும்பை இடையே ஆகாசா ஏர் விமான சேவை… சிறப்பு நாளில் இருந்து தொடக்கம்!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் வகையில், திருத்தங்களை செய்வதற்கான மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? என நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

தனியார்மயமாக்கம் இல்லை

தனியார்மயமாக்கம் இல்லை

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித் துறை இணையமைச்சர் பகவத் கே காரத் அவர்கள், ‘ பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் வகையில் எந்த மசோதாவையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிடவில்லை என தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தின் 2022ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடருக்கான வணிகப் பட்டியலின்படி, அத்தகைய மசோதா அறிமுகம், பரிசீலனை மற்றும் நிறைவேற்ற பட்டியலிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகள்
 

பொதுத்துறை வங்கிகள்

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நோக்கத்தை மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பதும், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட் வங்கி தவிர மற்ற வங்கிகள் தனியார்மயமாக்கலா?

ஸ்டேட் வங்கி தவிர மற்ற வங்கிகள் தனியார்மயமாக்கலா?

அதேபோல் ஸ்டேட் வங்கி தவிர மற்ற பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க பொருளாதார ஆலோசனைக் குழு பிரதமருக்கு பரிந்துரை செய்ததாக வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

அமைச்சரின் பதில்

அமைச்சரின் பதில்

இந்த கேள்விக்கு பதிலளித்த நிதித் துறை இணையமைச்சர் பகவத் கே காரத், ‘பாரத ஸ்டேட் வங்கியை தவிர மற்ற அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்குவது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) அறிவுறுத்தவில்லை என்றும், இது தவறான தகவல் என்றும் கூறினார்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

மேலும் கடந்த மூன்று நிதியாண்டுகளில் சுமார் 16.67 கோடி பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) கீழ் ரூ.9.98 கோடியை வங்கிகள் அனுமதித்துள்ளன என்றும், அதேபோல் 2021-22ஆம் ஆண்டில் PMMYயின் கீழ் சுமார் 5.38 கோடி பயனாளிகள் ரூ.3.39 லட்சம் கோடியை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் பகவத் கே காரத் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

விரைவில் தனியார்மயமாக்கம்?

விரைவில் தனியார்மயமாக்கம்?

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கம் குறித்த மசோதா நிறைவேற்றப்படாது என்றாலும் கூடிய விரைவில் ஒருசில பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Minister says about to introduce bill to facilitate privatisation of banks in monsoon session

Minister says about to introduce bill to facilitate privatisation of banks in monsoon session | நடப்பு பாராளுமன்ற வங்கிகள் தனியார்மயமாக்க மசோதா? அமைச்சர் விளக்கம்!

Story first published: Wednesday, August 3, 2022, 8:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.