நடிகை சித்ராவின் மரண வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு


பிரபல தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான சித்ராவின் மரண வழக்கில் அவர் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன் மீதான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

நடிகை சித்ராவின் மரண வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | Tv Actress Chitra Dead Case

இதனிடையே, ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்த மனுவில், எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, எனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஹேம்நாத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சித்ராவை ஹேம்நாத் தாக்கியதாக கூறுவது தவறு.

அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, சித்ராவின் மரணத்தில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது, ஆனால் அது என்னவென்று முழுமையாக தெரியவில்லை என வாதிடப்பட்டது.

நடிகை சித்ராவின் மரண வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | Tv Actress Chitra Dead Case

மேலும் சித்ராவின் கணவர் என்பதற்காக என் மீது கொலைப்பழியை சுமத்தப் பார்க்கின்றனர்.

இந்த வழக்கை இன்னும் தீவிரமாக விசாரித்தால் உண்மை வெளியே வரும்.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது” என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ”நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் கணவரான ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது” என மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.