பாஜகவுக்கு ஆலோசனை கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்..!

அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு சென்று இருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனா தைவான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு இருக்கக்கூடிய தேசப் பிரிவினை வாதத்தை முன்வைத்து இது பேசுபொருளாக இருக்கிறது.

சீனாவில் இருந்து பிரிந்த தேசம் தைவான் என்றாலும் தைவானையும் சேர்த்து ஒருங்கிணைந்த சீனா என்கின்ற கனவில் சீனா இருக்கிறது. இது எல்லை பிரச்சனையாக விரிவடையும் பட்சத்தில் போர் நடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் தைவான் சீனா தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை போர் நிலவி வருகிறது. தைவான் எல்லையிலும் சீன விமானங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

உலக நாடுகள் சில சீனாவுக்கு ஆதரவாகவும் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாகவும் உள்ளன. தைவான் மீதான அமெரிக்காவின் போக்கு சீனாவை கடும்கோபம் கொள்ளச் செய்துள்ளது. இந்நிலையில் தைவான், சீனா விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ள யோசனைகள் ” சீனா நம்மிடம் வாலாட்டும் போக்கை தொடர்ந்தால் தைவானுடன் நாம் நெருக்கமான உறவை முன்னெடுக்க வேண்டும்.

தைவான் விவகாரத்தை துருப்புச் சீட்டாக உரிய நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான உலக நாடுகள் தற்போதைய ஒருங்கிணைந்த சீனாவை ஏற்றுக் கொள்கின்றன. அதேநேரத்தில் தைவானுடனான பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்துகின்றன. தைவானுடன் வர்த்தக குழுவை நாம் கொண்டிருந்தாலும் தூதரக உறவாக, அதனை கருதவும் முடியாது. உக்ரைனோ, தைவானோ இந்தியா இந்த விவகாரங்களில் இருந்து விலகி நிற்கவும் முடியாது. இவ்வாறு சசி தரூர் கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பலர் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.