மன வேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மன வேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராமச்சந்திரன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் குடும்பத்தினர் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் மது குடுப்பதை கைவிட முடியாததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து மனம் உடைந்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டிற்கு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த குடும்பத்தினர் உடனே ராமச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு இராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.