இந்திய டெலிகாம் சந்தை தற்போது ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைய காத்திருக்கும் நிலையில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்காக ஏலம் முடிந்துள்ள நிலையில் யார் முதலில் 5ஜி சேவை அறிமுகம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 3வது டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
5ஜி சேவை எப்போ? கெத்து காட்டும் ஜியோ, ஏர்டெல் விட 2 மடங்கு அதிகம்.. அதானி ஏமாற்றம்..?

வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா 2022 ஜூன் காலாண்டு முடிவில் சுமார் 7,295 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 7,312 கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில் இக்காலாண்டில் நஷ்டத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

வருவாய்
வோடபோன் ஐடியா இந்த ஜூன் காலாண்டில் மொத்தமாக வருவாய் ரூ.10,410 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி என்பது 13.7 சதவீதம். வோடபோன் ஐடியாவின் ARPU காலாண்டில் 23.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.128 ஆக உள்ளது.

மொத்த மொத்தக் கடன்
ஜூன் காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியா-வின் மொத்த மொத்தக் கடன் 1.99 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இதில் 1.16 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணக் கடப்பாடுகளுக்கானது. மேலும் 67,270 கோடி ரூபாய் ஏஜிஆர் பொறுப்பு இது அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியவை, 15,200 கோடி ரூபாயை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் செலுத்த வேண்டியவை.

ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 88,078 கோடி ரூபாய் தொகைக்கு அலைக்கற்றைக் கைப்பற்றிய நிலையில் வோடபோன் ஐடியா 18,784 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,668 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைப் பெற்றுள்ளது.

புதிய சிஇஓ
வோடபோன் ஐடியாவின் தலைமை நிர்வாகி ரவீந்தர் தக்கர்-ன் பணிக்காலம் முடியும் நிலையில் இவருடைய இடத்தில், தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் அக்ஷயா மூந்த்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

3வது மாற்றம்
அக்ஷயா மூந்த்ரா-வை, ஆகஸ்ட் 19 முதல், மூன்று ஆண்டுகளுக்குத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது வோடபோன் ஐடியா நிர்வாகம். வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேர்மன்: ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன..? உண்மையில் தகுதியானவரா..?
Vodafone Idea posted 7,295 crore loss in Q1; ARPU improves 23 percent
Vodafone Idea posted 7,295 crore loss in Q1; ARPU improves 23 percent | வோடபோன் ஐடியா: 7300 கோடி ரூபாய் நஷ்டம்.. எப்ப லாபம் கிடைக்கும்..?!