5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. 7ஆம் நாள் முடிவில் எத்தனை ஆயிரம் கோடி?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஏழாவது நாளில் ஏலம் முடிவுக்கு வந்த பின்னர் மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு நாட்களாக நடந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 7 நாட்களில் மொத்தம் எவ்வளவு ஏலம் போனது, ஒவ்வொரு நிறுவனமும் எடுத்த ஏலம் எவ்வளவு என்பதை விரிவாக பார்ப்போம்.

ரூ. 1,50,173 கோடி ஏலம்

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறியபோது 72,098 மெகா ஹெர்ட்ஸ் மொத்த அலைக்கற்றைகளில், 71 சதவீதம் அதாவது 51,236 மெகா ஹெர்ட்ஸ் ஏலம் போனதாகவும், கடந்த ஏழு நாட்களாக 40 சுற்றுகள் ஏலம் நடந்துள்ளதாகவும் கூறினார். மேலும் இதுவரை மொத்த ஏலத்தொகை ரூ. 1,50,173 கோடி அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 10

5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று கூறிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், 5ஜி அலைக்கற்றையின் வெற்றிகரமான ஏலம் நாட்டின் தொலைத்தொடர்புத் துறைக்கு “ஆரோக்கியமான அறிகுறி” என்றும் தெரிவித்தார்.

ஜியோ முதலிடம்
 

ஜியோ முதலிடம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (ஆர்ஐஎல்) தொலைத்தொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, ரூ.88,000 கோடிக்கு மேல் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை அதிக அளவில் கையகப்படுத்தி ஏலத்தொகையில் முதலிடத்தில் உள்ளது. அனைத்து 22 வட்டங்களிலும் 700 மெகா ஹெர்ட்ஸ் பெற்ற ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். மேலும் ஒட்டுமொத்தமாக, ஏலத்தில் விடப்பட்ட அலைக்கற்றையின் 24,740Mhz (700, 800, 1800, 3300, 26GHz) 88,078 கோடி ரூபாய்க்கு ஜியோ வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

ரிலையன்ஸ் ஜியோவை அடுத்து பார்தி ஏர்டெல் 19,867 மெகா ஹெர்ட்ஸ் (700, 800, 1800, 3300, 26 ஜிகாஹெர்ட்ஸ்) ஏலத்தை எடுத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.43,084 கோடி ஆகும். வோடோபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ. 212 கோடிக்கு 400 மெகா ஹெர்ட்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

ஏலத்தில் ஜியோ ஆதிக்கம்

ஏலத்தில் ஜியோ ஆதிக்கம்

கடந்த ஏழு நாட்களில் நடந்த ஏலத்தில் ஜியோ, 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz பேண்டுகளில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையை பெற்றதன் மூலம் அனைத்து 22 வட்டங்களிலும் தனது நிலையை ஒருங்கிணைத்துள்ளது. இதனால் ஜியோ அதன் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய 5ஜி பயன்பாட்டை பயனாளர்களுக்கு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்லின் எம்டி மற்றும் சி.இ.ஓ கோபால் விட்டல் அவர்கள் இந்த ஏலம் குறித்து கூறியபோது, ‘எங்கள் போட்டியாளருடன் ஒப்பிடும்போது குறைந்த மதிப்பில் ஏலம் எடுத்திருந்தாலும் சில உத்திகளை கடைபிடித்ததாக தெரிவித்தார். கவரேஜ், வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் சிறந்த 5ஜி அனுபவத்தை வழங்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5G spectrum auction, Mukesh Ambani’s Jio top bidder; Govt receives bids worth over Rs.1.5 lakh crore

5G spectrum auction, Mukesh Ambani’s Jio top bidder; Govt receives bids worth over ₹1.5 lakh crore | 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. 7ஆம் நாள் முடிவில் எத்தனை ஆயிரம் கோடி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.