9 தமிழ் படங்கள் நாளை ரிலீஸ்
8/3/2022 10:15:02 PM
சென்னை: ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள படம் எண்ணித்துணிக. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வெற்றிச்செல்வன் இயக்கி உள்ளார். பிரபுதேவா நடித்துள்ள படம் பொய்க்கால் குதிரை. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மஹா தேவகி, கஜினிகாந்த், இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே அடுத்ததாக இயக்கியுள்ள படம் காட்டேரி. வைபவ், வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் நடித்துள்ளனர். காமெடி கலந்த பேய் படம் இது.
அதர்வா ஹீரோவாக நடித்துள்ள படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் கணேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது. துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகை மிருனாள் தாகூர் நடித்துள்ளனர். இதுதவிர பரத் நடித்துள்ள 6 ஹவர்ஸ், புதுமுக நடிகர்களின் படங்களான மாயத்திரை, துரிதம், கடைசி நொடிகள் ஆகிய படங்களும் நாளை திரைக்கு வர உள்ளன.