Moto G32 Release Date: மோட்டோரோலா நிறுவனம் தனது ‘G’ ஸ்மார்ட்போன் குடும்பத்தில் ஒரு பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. மோட்டோ ஜி82 5ஜி, ஜி71 5ஜி, ஜி52, ஜி42 என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.
தற்போது, நிறுவனம் பட்டியலில் புதிய பெயரை சேர்த்துள்ளது. அதன்படி, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் வெளியிட்டுள்ள மைக்ரோ தளம், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
மேலதிக செய்தி:
iQOO Vs OnePlus: ஐக்யூ 9டி 5ஜி போனை விட சிறந்ததா ஒன்பிளஸ் 10 ப்ரோ; வாங்க பாக்கலாம்!
அதுமட்டுமில்லாமல், போனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள பிளிப்கார்ட், சில அம்சங்களை குறித்த தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி ஏலம் முடிவடைந்து வரும் காலகட்டத்தின், இப்போதும் பழைய 4ஜி புராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனை நிறுவனம் வெளியிடுவது பயனர்கள் மத்தியில் சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் அனைத்து இடங்களிலும் 5ஜி கிடைக்க இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், இந்த போன் பட்ஜெட் பயனர்களுக்கு நல்ல தேர்வாக அமையலாம்.
மேலதிக செய்தி:
Nokia: வெறும் ரூ.4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியாவின் 4ஜி போன்!
இதுவரையில் வெளியான தகவல்களின்படி, சில அம்சங்கள் நமக்கு தெரியவந்துள்ளது. மேலும், இந்த போனின் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது.
மோட்டோ ஜி32 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (Moto G32 Specifications)
புதிய மோட்டொ பட்ஜெட் போன் 6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். பெரும்பாலான பயனர்கள் எதிர்பார்க்கும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே இது. பட்ஜெட் விலையிலும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேயை கொடுத்து பயனர்களின் எதிர்பார்ப்பை மோட்டோரோலா நிறுவனம் பூர்த்தி செய்கிறது என்றே சொல்லலாம்.
இந்த டிஸ்ப்ளே 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனை ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் இயக்கும். இதில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்டாக் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும்.
மேலதிக செய்தி:
Jio Recharge: தினசரி 2ஜிபி டேட்டா; ஓடிடி நன்மைகள் – ஜியோவின் சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்கள்!
போனின் பின்பக்கம் மூன்று கேமரா கொண்ட அமைப்பு இருக்கும். இதில் ஒரு 16 மெகாபிக்சல், இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் வழங்கப்படும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்படும்.
மோட்டோ ஜி32 மொபைலில், 4ஜிபி ரேம் மெமரியும், 64 ஜிபி ஸ்டோரேஜ் மெமரியும் இருக்கும். பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,000-க்கும் குறைவாக டெக் சந்தைக்குள் கொண்டுவரப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.