அதிமுக அலுவலக சாவி: உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மேல்முறையீடு| Dinamalar

புதுடில்லி: கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். சீல்-ஐ அகற்றக்கோரி பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.