உலகளவில் மொபைல் உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் எது.. டாப் 10 நிறுவனங்கள் எது?

செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான சாதனங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 264.3 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது உலகளவில் செல்போன்களின் ஏற்றுமதியானது 2017ல் இருந்து 3.1% அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 256 3 பில்லியன் டாலராகும்.

கடந்த 2020 – 2021ம் காலகட்டத்தில் செல்போன்களின் ஏற்றுமதி, மற்றும் விற்பனை என்பது பெரியளவில் இல்லாவிட்டாலும், 1.3% வளர்ச்சி கண்டுள்ளது.

உலகில் அதிக கடன் கொண்ட 10 நாடுகள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருங்காங்க?

ஏற்றுமதியில் முன்னிலை

ஏற்றுமதியில் முன்னிலை

2021ம் ஆண்டு நிலவரப்படி ஆசிய ஏற்றுமதியாளர்கள் தான் மொத்த ஏற்றுமதியிலும் 82.3% பங்கு வகிக்கின்றனர். மொத்தம் 217.6 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன்களை ஏற்றுமதி செய்கின்றனர். இதே இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பங்கு 12.3% ஆகும். இதே அமெரிக்காவின் பங்கு 4.9% ஆகும்.

டாப் 10 மொபைல் ஏற்றுமதி நாடுகள்

டாப் 10 மொபைல் ஏற்றுமதி நாடுகள்

சீனா (48.4%) – 127.9 பில்லியன் டாலர்

வியட்னாம் (14.8%) – 39.1 பில்லியன் டாலர்

ஹாங்காங் (12.2%) – 32.3 பில்லியன் டாலர்

அமெரிக்கா (4.8%) – 12.6 பில்லியன் டாலர்

ஜெர்மனி (2.1%) – 5.7 பில்லியன் டாலர்

செக் குடியரசு (2.0) – 5.4 பில்லியன் டாலர்

சிங்கப்பூர் (2.0%) – 5.3 பில்லியன் டாலர்

தென் கொரியா (1.9%) – 4.93 பில்லியன் டாலர்

இந்தியா (1.8%) – 4.87 பில்லியன் டாலர்

ஆஸ்திரியா (1.4) – 3.7 பில்லியன் டாலர்

ஏற்றுமதி அதிகரிப்பு
 

ஏற்றுமதி அதிகரிப்பு

2020 – 21 கால கட்டத்தில் மிக வேகமாக செல்போன் ஏற்றுமதி அதிகரித்து வரும் நாடுகளில், இந்தியாவின் ஏற்றுமதியானது ஏற்றுமதி 63% அதிகரித்தும், சிங்கப்பூரின் ஏற்றுமதி 33.9% அதிகரித்தும் அமெரிக்காவின் ஏற்றுமதி 31.5% அதிகரித்தும், பெல்ஜியத்தின் ஏற்றுமதி 28% அதிகரித்தும் காணப்படுகிறது. மேற்கண்ட சில நாடுகளில் ஏற்றுமதி அதிகரித்து இருந்தாலும், செக் குடியரசில் இருந்து -17.3% குறைந்தும், ஸ்வீடன் – 16.2%மும், ஜெர்மனி – 6.2%மும், ஸ்லோவாகியா -4.5%மும் இத்தாலியில் இருந்து -3.1%மும் குறைந்துள்ளது.

டாப் 10 மொபைல் பிராண்டுகள் எது?

டாப் 10 மொபைல் பிராண்டுகள் எது?

  1. சாம்சங்
  2. ஆப்பிள்
  3. ஜியோமி
  4. ஒப்போ
  5. விவோ
  6. ரியல் மி
  7. மோட்டோரோலா மொபைலிட்டி
  8. டிரான்ஸிசென்
  9. ஹூவாய்
  10. ஹானர்

டாப் உற்பத்தியாளார்கள் யார்?

டாப் உற்பத்தியாளார்கள் யார்?

செல்போன் தயாரிப்பில் தாய்வானை சேர்ந்த ஏசர் முதலிடத்தில் உள்ளது, இதே இரண்டாவது இடத்தில் அமெரிக்காவினை சேர்ந்த ஆப்பிள் நிறுவனமும், கனடாவினை சேர்ந்த பிளாக்பெர்ரி-ம், BLU ப்ராடக்ட்ஸ் 4வது இடத்திலும், 5வது இடத்தில் இங்கிலாந்தினை சேர்ந்த புல்லிட் குழுமமும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்த இடங்களில் FT குழுமம் (வியட்னாம்), அமெரிக்காவினை சேர்ந்த கூகுள் நெக்சாஸ், சீனாவினை சேர்ந்த ஹீவாய், ஹாங்காங்கினை சேர்ந்த லெனோவா, மைக்ரோசாப்ட் மொபைல் (அமெரிக்கா) 10வது இடத்தில் உள்ளது. (இது 2021ம் ஆண்டு தரவு அடிப்படையில் எழுதப்பட்டது)

இந்தியாவின் டாப் 10 பணக்கார பெண்கள் யார் யார் தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which are the top 10 mobile phone producing countries in the world? What are the top 10 companies?

Which are the top 10 mobile phone producing countries in the world? What are the top 10 companies?/மொபைல் உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் எது.. டாப் 10 நிறுவனங்கள் எது?

Story first published: Thursday, August 4, 2022, 17:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.