ஐபிஓ சொதப்பினாலும் எல்ஐசி தான் நம்பர் ஒன்… அம்பானியை முந்தி சாதனை!

சமீபத்தில் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ பட்டியலிடப்பட்ட நிலையில், பட்டியலிடப்பட்ட முதல் நாளிலிருந்தே சரிவில் இருந்தது என்பதும் இந்த பங்கை வாங்கிய ஏராளமானோர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் எல்ஐசியின் ஐபிஓ சொதப்பினாலும் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இந்திய நிறுவனங்களில் முதல் நிறுவனமாக எல்ஐசி இடம் பெற்றுள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கூட எல்ஐசியை விட பின்னால் தான் உள்ளது.

இந்த நிலையில் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

2 உலகப்போர்களை கண்ட #சென்னை பேக்கரி… 137 ஆண்டுகளாக ஒரே தரம்!

ஃபார்ச்சூன் 500

ஃபார்ச்சூன் 500

ஃபார்ச்சூன் 500 என்பது உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலாகும். இந்த பட்டியல் நிறுவனங்களின் வருவாயின் அடிப்படையில் கணக்கிடப்படும். முதல் முறையாக இந்த பட்டியல் 1955ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள இந்திய நிறுவனங்களில் எல்ஐசி முதலிடத்திலும் உலக அளவில் வால்மார்ட் முதலிடத்திலும் உள்ளது.

எல்ஐசி முதலிடம்

எல்ஐசி முதலிடம்

ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் நுழைந்துள்ள எல்ஐசி நிறுவனம், 97.26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் மற்றும் 553.8 மில்லியன் டாலர் லாபத்துடன் பார்ச்சூன் 500 பட்டியலில் 98வது இடத்தை பிடித்துள்ளது.

ரிலையன்ஸ்
 

ரிலையன்ஸ்

2022ஆம் ஆண்டுக்கான பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 51 இடங்கள் முன்னேறி 104ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 93.98 பில்லியன் டாலர் வருவாய் மற்றும் 8.15 பில்லியன் டாலர் நிகர லாபம் பெற்றுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 19 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளது

வால்மார்ட் முதலிடம்

வால்மார்ட் முதலிடம்

உலக அளவில் ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்க சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் உள்ளது. வால்மார்ட் தொடர்ந்து 9வது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. அமேசான், சீன எரிசக்தி நிறுவனங்களான ஸ்டேட் கிரிட், சீனா நேஷனல் பெட்ரோலியம் மற்றும் சினோபெக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

9 இந்திய நிறுவனங்கள்

9 இந்திய நிறுவனங்கள்

ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்த ஆண்டு 9 இந்திய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 5 நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமானவை மற்றும் நான்கு நிறுவனங்கள் தனியார் துறையை சேர்ந்தவை ஆகும்.

ஐஓசி மற்றும் ஓஎன்ஜிசி

ஐஓசி மற்றும் ஓஎன்ஜிசி

இந்திய நிறுவனங்களில் எல்ஐசி, ரிலையன்ஸ் நிறுவனங்களை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) 28 இடங்கள் முன்னேறி 142வது இடத்தையும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) 16 இடங்கள் முன்னேறி 190வது இடத்தையும் பிடித்துள்ளது.

டாடாவின் 2 நிறுவனங்கள்

டாடாவின் 2 நிறுவனங்கள்

ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 2 டாடா குழும நிறுவனங்கள் உள்ளன. ஒன்று டாடா மோட்டார்ஸ், இரண்டவது டாடா ஸ்டீல் ஆகியவை ஆகும். டாடா மோட்டார்ஸ் இந்த பட்டியலில் 370வது இடத்திலும் டாடா ஸ்டீல் 435 வது இடத்திலும் உள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 17 இடங்கள் முன்னேறி 236வது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 19 இடங்கள் முன்னேறி 295வது இடத்திலும் உள்ளன. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 437வது இடத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC Becomes Top-Ranked Indian Firm On Fortune Global 500 List

LIC Becomes Top-Ranked Indian Firm On Fortune Global 500 List | ஐபிஓ சொதப்பினாலும் எல்ஐசி தான் நம்பர் ஒன்… அம்பானியை முந்தி சாதனை!

Story first published: Thursday, August 4, 2022, 9:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.