காமன்வெல்த் போட்டிகள்: ஒரே நாளில் 5 பதக்கங்களை அள்ளிக் குவித்த இந்தியா!

Birmingham 2022 Commonwealth Games Tamil News: 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய அணி ஏற்கனவே நடந்த போட்டிகளில் 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்ற நிலையில், நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்று அசத்தியது. இதன் மூலம் காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

துலிகா மான்

ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் களமிறங்கிய நிலையில், மொத்தம் 355 கிலோ எடையைத் தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

லவ்ப்ரீத் சிங்

ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சவுரவ் கோசல்,

ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

குர்தீப் சிங்

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தினார்.

தேஜஸ்வின் சங்கர்

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.