சென்னை: 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி சசிகலாவிற்கு வருமான வரித்துறை ரூ.10.13 லட்சம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கை கைவிடப்பட்டு வழக்குகளை திரும்பப்பெறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை ரத்து செய்தனர்.