ஹைதராபாத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கார் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜ்பவன் சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தொங்கியபடி நின்றது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து ஏற்பட்ட இடத்திற்கு கீழே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அந்தரத்தில் தொங்கும் காரால் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இதனால் அந்தக் காரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM