தைவான் நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகச் சீனா தொடர்ந்து நெருக்கடியை அளித்து வரும் நிலையில், தைவான் அரசு அமெரிக்கா துணையுடன் ஜனநாயக நாடாகத் தொடர்ந்து இருக்க விரும்பும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி வருகை சீனா- தைவான் எல்லையில் பதற்றமாகச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கத் தற்போது சீனா மீது புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் சீனாவுக்கு மிகப்பெரிய வர்த்தகத் தடையை உருவாக்கக் காத்திருக்கிறது.
சீனா – தைவான் பிரச்சனை.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு..!
செமிகண்டக்டர் உற்பத்தி
சீனா நாட்டின் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட திட்டமிட்டு அமெரிக்கா சீனா மீது முக்கியமான ஏற்றுமதி தடையை விதிக்க முடிவு செய்துள்ளது.இந்த வர்த்தகத் தடையால் குளோபல் சிப் செயின் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அமெரிக்க வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்கா தடை
அமெரிக்கா அரசு சீனா-வில் இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எவ்விதமான உபகரணங்களும் அளிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மூதல் டேட்டா சென்டர் வரையில் பயன்படுத்தப்படும் அட்வான்ஸ் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புப் பாதிக்கப்படும்.
சாம்சங் மற்றும் SK Hynix
அமெரிக்கத் திட்டமிட்டு உள்ள இந்தத் தடை உத்தரவு மூலம் தென் கொரியா நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் SK Hynix போன்ற நிறுவனங்களால் சீனாவுக்கும் சீன நிறுவனங்களுக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் கருவிகளை அளிக்க முடியாது.
முடக்கம்
இதனால் சீனா நிறுவனத்தால் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியை அதிகரிக்க முடியாதது மட்டும் அல்லாமல் உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியாது. இது சீனாவுக்கும் மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரிய பாதிப்பாகும்.
50 சதவீதம் வர்த்தகம்
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் SK Hynix ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் குளோபல் NAND பிளாஷ் மெமரி சிப் பிரிவில் சுமார் 50 சதவீதம் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இவ்விரு நிறுவனங்களும் தனது உற்பத்தியை அதிகரிக்கச் சீனாவில் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.
சீனா ஆதிக்கம்
சீனாவில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் SK Hynix தயாரிக்கும் செமிகண்டக்டர் சிப்-கள் ஆப்பிள், அமேசான், பேஸ்புக், மெட்டா, கூகுள் ஆகிய நிறுவனங்கள் வாங்கி வரும் நிலையில், உலகளவில் ஸ்மார்ட்போன், கம்பியூட்டர், எலக்ட்ரிக் கார் போன்ற பல தயாரிப்புகளில் இந்நிறுவனங்களில் சிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சாம்சங் சீனா தொழிற்சாலை
சாம்சங் சீனாவின் மத்திய பகுதியான Xian பகுதியில் அந்நாட்டின் மிகப்பெரிய சிப் தொழிற்சாலையை 2012 முதல் சுமார் 26 பில்லியன் டாலர் முதலீட்டில் அமைத்துள்ளது. குளோபல் NAND உற்பத்தியில் 15 சதவீதமும், சாம்சங்-ன் மொத்த உற்பத்தியில் 45 சதவீதமும் இந்தச் சீன தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது.
USA Govt plans to halt China’s advances in semiconductor manufacturing
USA Govt plans to halt China’s advances in semiconductor manufacturing சீனா-வை கட்டம் கட்டி அடிக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்..?