சும்மா இருக்கும் ஸ்விம்மிங் பூல்-ஐ வைத்து 1 கோடி வருமானம்.. அட இது தெரியமா போச்சே..!

பெரிய பணக்காரர்களின் பங்களாவில் நீச்சல் குளங்கள் இருக்கும் என்பதும், அந்த நீச்சல் குளங்களை அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக வைத்திருப்பார்கள் என்பதும் தெரிந்த ஒன்று தான்.

இந்த நிலையில் போர்ட்லாண்ட் ஓரிகான் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தை பெரும் செலவில் கட்டிய நிலையில் அந்த நீச்சல் குளத்தை வாடகைக்கு விட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளனர்.

பயன்படுத்தாமல் இருக்கும் நீச்சல் குளத்தின் மூலம் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 6 லட்சம் அதிகரிப்பு.. ஒரே ஒரு காரணம் தான்..!

சொகுசு நீச்சல் குளம்

சொகுசு நீச்சல் குளம்

போர்ட்லேண்ட், ஓரிகான் பகுதியை சேர்ந்த ஜம் பேட்டன் என்ற நபர் கடந்த 2012ஆம் ஆண்டு வெஸ்ட் லின்னில் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு சொகுசு நீச்சல் குளத்தை கட்டினார். இதற்காக அவர் $110,000 செலவு செய்தார். இருப்பினும் நீச்சல் குளத்திற்காக செலவு செய்த பணத்தை அவர் நீச்சல் குளத்தின் மூலமாகவே எடுத்துவிடலாம் என்று அவர் நினைத்திருக்கவில்லை.

நீச்சல் குளம் வாடகை

நீச்சல் குளம் வாடகை

இந்த நிலையில் திடீரென தனது நீச்சல் குளத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என்ற ஐடியா ஜம் பேட்டன் மற்றும் அவருடைய மனைவிக்கு தோன்றியது. தனது சொகுசு நீச்சல் குளத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் இரண்டே ஆண்டுகளில் அவர் நீச்சல் குளத்திற்காக செலவு செய்த தொகையை விட அதிகமாக அதாவது $177,000 வருவாய் ஈட்டியுள்ளார்.

குளத்தின் அம்சங்கள் மற்றும் வசதிகள்
 

குளத்தின் அம்சங்கள் மற்றும் வசதிகள்

ஜம் பேட்டன் கட்டிய நீச்சல் குளம் 15,000-கேலன் தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இந்த நீச்சல் குளத்தில் நீச்சலடிக்க, நீச்சல் பழக ஒரு மணி நேரத்திற்கு $75 என்ற கட்டணத்தில் வாடகைக்கு இந்த தம்பதிகள் வழங்குகிறார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கு $10 கூடுதலாக வசூலிக்கிறார்கள்.

நீச்சல் குளத்தின் ஆழம்

நீச்சல் குளத்தின் ஆழம்

ஜம் பேட்டனின் நீச்சல் குளம் 26க்கு 18 அடி நீள அகலம் கொண்டது என்பதும், அதன் ஆழம் 3.5 அடி கொண்டது என்பதும், ஒருசில பகுதி நீச்சல் குளத்தின் ஆழம் 6 அடியாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நீச்சல் குளத்தை ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 23 பேர் பயன்படுத்தலாம்.

குளிர்காலத்தில் ஹீட்டர்

குளிர்காலத்தில் ஹீட்டர்

இந்த நீச்சல் குளம் குறித்து ஜிம் பேட்டன் மேலும் கூறியபோது, ‘நாங்கள் எங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் நீச்சல் குளத்தை வடிவமைத்து, மரங்களால் சூழப்பட்ட, இயற்கையான சூழலில் வடிவமைத்துள்ளோம். குளிர்காலத்தின் எங்கள் வாடிக்கையாளரின் வசதிக்காக நீச்சல் குளத்தின் தண்ணீரை ஹீட்டர் மூலம் சூடுப்படுத்தி வைப்போம்.

பிற வசதிகள்

பிற வசதிகள்

எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நீச்சல் குளத்துடன் சேர்த்து நிறைய வசதிகள் செய்துள்ளோம். குளியலறை, ஆடை மாற்றும் அறை, 8 பேர் தங்கும் அளவிற்கு ஓய்வு அறை உள்பட பல வசதிகள் இருப்பதாக ஜிம் பேட்டன் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு

பராமரிப்பு

நீச்சல் குளத்தின் மூலம் நல்ல வருமான வந்தாலும் அதனை பராமரிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் நீச்சல் குள பராமரிப்புக்காக சுமார் $37,000 செலவு செய்துள்ளோம். தண்ணீரின் ரசாயனங்களை சுத்தம் செய்வது மற்றும் தண்ணீரின் தரத்தை அவ்வப்போது சோதனை செய்வது ஆகியவைகளை கவனிக்க நானும் என் மனைவி லிசாவும் தினமும் 14 மணி நேரம் செலவு செய்கிறோம் என்றும் ஜிம் பேட்டன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Couple Makes Over Rs 1 Crore By Renting Out Their Backyard Pool On A Platform Called Swimply

Couple Makes Over Rs 1 Crore By Renting Out Their Backyard Pool On A Platform Called Swimply | சும்மா இருக்கும் ஸ்விம்மிங் பூல்-ஐ வைத்து 1 கோடி வருமானம்.. அட இது தெரியமா போச்சே..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.