நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மொத்தம் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். நமது நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.
இளையராஜாவை பொறுத்தவரை அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் பல ஆண்டுகளாக தமிழ் திரை உலகின் இசைத்துறையை ஆட்சி செய்தபடி 1000 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 5 முறை தேசிய விருதுகளை இளையராஜா வென்றுள்ளார். இந்நிலையில் தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு இந்திய அரசு 2010ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
சசிகலா கையில் மந்திரக்கோல்; கதி கலங்கிய அதிமுக தலைகள்!
இதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான், இளையராஜாவுக்கு தற்போது நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த கவுரவத்தை நாடே பாராட்டிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்த பதவி நியமனத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், பாஜக தோழமை கட்சி தலைவருமான ஜான்பாண்டியன் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் பற்ற வைத்த நெருப்பு; பீதியில் எடப்பாடி பழனிச்சாமி!
மேலும், இளையராஜா அரசியலில் ஜீரோ. ஒழுங்காக வருமான வரி கட்டாத அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தலித் என்று சொன்னாலும், சூடு சொரணை இல்லாமல் இருப்பவர்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசி, பா.ஜ.கவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதால் வழங்கப்பட்ட சன்மானம் தான் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி, என்கின்ற ரேஞ்சுக்கு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜான் பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.