தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஆராய்ச்சி கருத்தரங்கு – 2022

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ‘ஆய்வுக் கருத்தரங்கம் – 2022’ “மல்டிநோடல் செக்யூரிட்டி டைனமிக்ஸ்” எனும் தொனிப்பொருளின் கீழ் 2022 ஆகஸ்ட் 17 அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி கருத்துக்களை ஆராய்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சமகால பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கல்விசார் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் கல்வியாளர்கள், மூத்த இராணுவம் மற்றும் போலிஸ் அதிகாரிகளிடையே வலையமைப்பை வளர்ப்பதற்கு இக்கருத்தரங்கம் ஒரு வினையூக்கியாக அமையும். கல்வியாளர்களின் பாடத்திட்டங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய பல கல்வித் துறைகளில் அவர்களின் ஞானம் மற்றும் அனுபவங்களை மேம்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும், இக்கருத்தரங்கு ஒரு சிறந்த மேடையை உருவாக்கும்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான திரு. லலித் வீரதுங்க சிறப்புரை ஆற்றவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.