நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சேர்ந்த முக்கிய நபர்… ரிஷி சுனக்குக்கு மற்றொரு பெரிய அடி


பிரித்தானிய அரசியலில் இன்று நிலவும் குழப்பத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுபவர்கள் இருவர்.

ஒருவர் முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக், மற்றொருவர் முன்னாள் சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித். இவர்கள் இருவரும் தத்தம் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே, அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்ய, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை உருவாயிற்று.

ஆனால், போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையிலிருந்து முதலில் ராஜினாமா செய்தவர் சாஜித் தான், அதற்குப் பிறகுதான் ரிஷி ராஜினாமா செய்தார். ஆனலும், இன்னமும் போரிஸ் ஜான்சனின் ஆட்சி கவிழ்வதற்கு ரிஷிதான் காரணம், அவர்தான் போரிஸ் ஜான்சனை முதுகில் குத்திவிட்டார் என்றே பேசப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், சாஜித் மீண்டும் ஒரு சந்தர்ப்பவாத செயலைச் செய்துள்ளார். ஆம், திடீரென ரிஷியை எதிர்த்து போட்டியிடும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார் சாஜித்.

நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சேர்ந்த முக்கிய நபர்... ரிஷி சுனக்குக்கு மற்றொரு பெரிய அடி | Who Abandons A Friend And Joins The Opposition

image – bbc

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட சாஜித்தும் ரிஷியும் நண்பர்கள் என்பதை பலரும் அறிவார்கள். அப்படியிருக்கும் நிலையில், திடீரென தன் நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சேர்ந்துள்ளார் சாஜித்.

அத்துடன் தனது நண்பரான ரிஷியின் பொருளாதாரக் கொள்கைகளைத் தாக்கிப் பேசிவிட்டு, அவரை விட்டு எதிரணியில் போய்ச் சேர்ந்துள்ளார் சாஜித்.  

ஏற்கனவே பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததே ரிஷிக்கு பெரிய அடியாக கருதப்படும் நிலையில், தற்போது அவரது நண்பரான சாஜித் ஜாவிதும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது ரிஷிக்கு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.