ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது.
இதன்போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) தியவன்னா ஏரிக்குள் திடீரென உடைந்து விழுந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடற்படை குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.