நேரத்தை மிச்சமாக்க புதுமை இன்டிகோ விமானத்தில் 3 வழிகளில் இறங்கலாம்: உலகளவில் முதல்முறை

புதுடெல்லி: இன்டிகோ விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளை மூன்று வழிகளில் இறக்கி விட திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் தனியார் விமான நிறுவனங்களில் இன்டிகோவும் ஒன்று. இது தனது 16வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு இது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு விரைவில் மூன்று வழிகளை பயன்படுத்த இருக்கிறோம். இதன் மூலம், உலகிலேயே இந்த நடைமுறையை பின்பற்றும் முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை இன்டிகோ பெறும்,’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், ‘பொதுவாக, 321 ரக விமானங்களில்  இருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு 2 வழிகள் மட்டுமே பயன்படுத்தபடும். இதற்கு 13-14 நிமிடங்களாகும். அவர்களை 3 வழிகள் மூலமாக இறக்கி விட்டால், இறங்கும் நேரம் 5-6 நிமிடங்கள் குறையும். அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து 7-8 நிமிடங்களில் இறங்கி விடுவார்கள். இதற்கு ஏற்ற வகையில்  விமானங்கள் விரைவில் மாற்றப்படும். முதல் கட்டமாக பெங்களூரூ, மும்பை, டெல்லியில் இது  அமல்படுத்தப்படும். பின்னர், மற்ற விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்,’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.