பம்பையில் வெள்ளம்: சபரிமலைக்கு செல்ல தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பம்பை: பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன் மத்திய தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 10 மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

latest tamil news

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை நதியில் அபாயகரமான அளவுக்கு நீர் செல்வதால் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாலை 6 மணிக்குள் சன்னிதானாத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.