டெல்லி: பிரதமரின் மிரட்டலுக்கு கங்கிரஸ் பயப்படாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கட்சி தலைவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி; நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் பயப்படப் போவதில்லை. பாஜக அரசுக்கு எதிராக தொடந்து குரல் கொடுப்போம். அவர்கள் எதைச் செய்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, நம் நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க நான் தொடர்ந்து பணியாற்றுவோம். மேலும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் எங்களை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன் இவ்வாறு கூறினார்.