லண்டன்-பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கும் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை விட, வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் முந்துகிறார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். இதையடுத்து, கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.இதில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். வரும் செப்., 5ம் தேதி, கட்சியின் 1.80 லட்சம் உறுப்பினர்கள் ஓட்டளித்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் கட்சி உறுப்பினர்கள் இடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், லிஸ் டிரசுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.நேற்று முன்தினம் இரண்டாவது கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், லிஸ் டிரசுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்குக்கு 26 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 12 சதவீதம் பேர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.கட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சரும், பாகிஸ்தானை பூர்வீகமாக உடையவருமான சாஜித் ஜாவித் சமீபத்தில் லிஸ் டிரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ரிஷி சுனக்குக்கான ஆதரவு குறைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement