மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மோடி அரசின் திட்டம் இதுதானா..?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அகவிலைப்படியை (DA) திருத்தியமைக்க உள்ளது.

பிப்ரவரி 2022 முதல் அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணியாக அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA-வை அமைச்சரவை 4% வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கொடுப்பனவு திருத்தம் செய்யப்படும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. மேலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் DA உயர்த்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடைசியாகக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டன.

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!

மத்திய அரசு அறிவிப்புகள்

மத்திய அரசு அறிவிப்புகள்

ஜூலை 2021 இல் மத்திய அரசு ஊழியிர்களுக்கான அகவிலைப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் 11 சதவீதம் உயர்த்தி, 17% இல் இருந்து 28% உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், தீபாவளிக்கு முன்னதாக, 3% (28% முதல் 31% வரை) உயர்த்தப்பட்டது, 2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

34 சதவீதம் அகவிலைப்படி

34 சதவீதம் அகவிலைப்படி

இதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டின் மார்ச் 30 ஆம் தேதி மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% (31% முதல் 34%) உயர்த்துவதாக அறிவித்தது, இது ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வந்தது.

மாநில அரசுகள்
 

மாநில அரசுகள்

செவ்வாய்க்கிழமை, திரிபுரா அரசு அடுத்த ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னதாகத் தனது மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% உயர்த்த (3% முதல் 8%) வழங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

மத்தியப் பிரதேச மாநில அரசு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3% (31% முதல் 34%) உயர்த்தியது, அதை ஆகஸ்ட் மாத சம்பளத்தில் வழங்கப்படும் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 

அகவிலைப்படி என்றால் என்ன..?

அகவிலைப்படி என்றால் என்ன..?

அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியரின் மாதச் சம்பளத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. பணவீக்கத்தின் காரணமாக விலைவாசியில் ஏற்பட்டு உள்ள அதிகரிப்புக்கு ஈடுசெய்ய வழங்கப்படும் ஒரு கொடுப்பனவு தான் இந்த அகவிலைப்படி. சில்லறை பணவீக்க விகிதங்களைக் கருத்தில் கொண்டு DA விகிதத்தை மத்திய அரசு தீர்மானிக்கிறது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

அரசு ஊழியர்கள் தவிர, குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த அகவிலைப்படி-யை பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். மத்திய அரசு தரவுகள் அடிப்படையில் தற்போது 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

7th Pay Commission: Dearness Allowance for govt staff, and pensioners may raise upto 4 percent

7th Pay Commission: Dearness allowance for govt staff, pensioners may raise upto 4 percent மத்திய அரசு ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. மோடி அரசின் முக்கிய அறிவிப்பு வர போகிறது..!

Story first published: Thursday, August 4, 2022, 15:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.