உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிப்பு, ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் வேளையில் இந்தியா பொருளாதார வளர்ச்சி உடன் இருக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறித்துக் கேள்விகளை எழுப்பியனர்.
இந்தியப் பொருளாதாரம் மந்தநிலை (Recession) அல்லது தேக்கநிலை (Stagflation) தள்ளப்படுவது குறித்துக் கேள்வி தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கடனைத் திறமையாக நிர்வகித்துள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார். இதற்கு ஏற்கனவே சுப்பிரமணியன் சாமி பதிலடி கொடுத்துள்ள நிலையில், தற்போது ரகுராம் ராஜன்-ம் விமர்சனம் செய்துள்ளார்.
கோமியம் லிட்டர் 4 ரூபாய்.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் முக்கிய அறிவிப்பு..!

ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கி-யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ராய்பூரில் பேசிய போது இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வது மட்டுமல்ல, வேகமாகவும் இயங்குகிறது என்று கூறினார். இப்படிப் பாராட்டிப் பேசிய அடுத்தச் சில நிமிடத்தில் இந்திய பொருளாதாரம் குறித்து முக்கியக் கருத்தை முன் வைத்தார்.

வேலையில்லா வளர்ச்சி
ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில், இந்திய பொருளாதாரத்தின் இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி வேலையில்லா வளர்ச்சியாகும் அதாவது Jobless Growth என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்புகள்
வேலைவாய்ப்புகள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியப் பணியாகும். எல்லோரும் ஒரு மென்பொருள் புரோகிராமர் அல்லது ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் அனைவருக்கும் நிலையான வேலைவாய்ப்புகள் அவசியம் என ரிசர்வ் வங்கி-யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறையினர்
ரகுராம் ராஜன் இதற்கு முன்பு இந்தியா தனது இளம் தலைமுறையினருக்குச் சரியான கல்வியை அளிக்கத் தவறுகிறது, மருத்துவம் போன்ற முக்கியமான படிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அதிகளவிலான இந்தியர்களைத் தள்ளி வருகிறது.

சேவைத் துறை
இந்தியா சீனா-வை போல் உற்பத்தி மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வருவதைக் காட்டிலும், சேவைத் துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. மருத்துவர் போன்ற பல முக்கியமான சேவைகளை இந்தியா வெளிநாடுகளிடம் இலக்க வேண்டிய நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய வளர்ச்சி
மேலும் ரகுராம் ராஜன் இந்தப் பேட்டியில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. ஆயினும், நாட்டின் பரந்த மக்கள்தொகை கொண்டு உள்ளதன் காரணமாக இன்னும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Raghuram Rajan cautions Indian Economy’s jobless growth
Raghuram Rajan cautions Indian Economy’s jobless growth ரகுராம் ராஜன் எச்சரிக்கை.. இந்தியா வேலையில்லா பொருளாதாரமாக உள்ளது..!