உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த சுய-இயக்க பீரங்கியை போலாந்து வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யா – உக்ரைன் போர் 5 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது.
ரஷ்யப் படை உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு பகுதிகளாக கைப்பற்றி வருகிறது.
உக்ரைனும் முடிந்தவரை பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த போரில் சில முக்கிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு எதாவது ஒரு வழியில் உதவிகளை செய்து வருகின்றன.
⚡⚡Polish-donated 2S1 Goździk 122mm SPG in Ukrainian service. Poland donated a few units earlier in the spring. ⚡#StopRussia #StandWithUkraine pic.twitter.com/PrERCqHoVo
— Eng yanyong (@EngYanyong) August 3, 2022
சமீபத்தில் கூட உக்ரைனுக்கு 550 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்தது.
அந்த வகையில் போலாந்து 2S1 Goździk 122mm சுய இயக்க பீரங்கியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
இது ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் உக்ரைனுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதே போன்ற உதவிகளை போலாந்து ஏற்கனவே உக்ரைனுக்கு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.