தொழில் நுட்பங்களின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தினை பெரியளவில் மேம்படுத்தியுள்ளது, தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் தொழில் நுட்பத்தால் இன்னும் மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதாரம், திறன் இவற்றில் மிகப்பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைத்ராபாத்தினை சேர்ந்த பள்ளி ஒன்று புதுமையான முயற்சியினை கையில் எடுத்துள்ளது.
அது ரோபோ மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது தான். இந்தியாவில் இது போன்றதொரு முயற்சியினை எடுத்தது இந்த டிரஸ்ட் தான் எனலாம்.
மாருதி சுசூகி-ன்னா சும்மாவா.. வாயை பிளக்கவைக்கும் வளர்ச்சி..!
ரோபோட்டிக் ஆசிரியர்
அப்படி ஒரு முயற்சியினை ஹைத்ராபாத்தினை சேர்ந்த ஒரு பள்ளியொன்று தான் எடுத்துள்ளது. அந்த பள்ளியில் உள்ள ரோபோட்டிக் ஆசிரியர் 5ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறது. இந்த ரோப்போட்டிக் ஆசிரியருடன் கூட்டாக, ஒரு ஆசிரியரும் உடன் இருக்கிறார்.
எந்த பள்ளி?
இந்த புதுமையான முயற்சியானது இண்டஸ் டிரஸ்ட் (Indus Trust) மூலம் நடத்தப்படும் இண்டஸ் சர்வதேச பள்ளியில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஹைத்ரபாத்தில் மட்டும் அல்லாமல் பெங்களூரு, புனே மற்றும் பெலகாவியில் உள்ள பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு உதவியாசிரியர்
இந்த ரோபோக்கள் மூலம் 7, 8 மற்றும் 9 வகுப்பு பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல் மற்றும் வரலாறு ஆகிய வகுப்புகளுக்கு, ஆசிரியர் உதவியாளர்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். ஆக மாணவர்களுக்கு இவ்விரு ஆசிரியர்களும் இணைந்தே பாடம் எடுக்கின்றனர்.
வெவ்வேறு மொழிகள்
இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் கல்வியை வழங்கலாம் எனவும் கல்வியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் மாணவர்கள் அவரவர் மொழிகளில் சந்தேகங்களை கேட்கலாம். பதிலையும் கேட்டுக் கொள்ள முடியும். மொத்தத்தில் இந்த ரோபோக்கள் மூலம் மாணவர்கள் எளிதில் இணைந்து கொள்ள முடியும்.
முக்கிய அம்சம்
குழந்தைகள் இந்த ரோப்போக்களை கணினி மற்றும் டேப், லேப்டாப்கள் போன்ற அம்சங்களுடனும் இணைந்து கொள்ள முடியும். இது சமூக இடைவெளி பொருளாதாரத்தினை குறைக்க ஒரு முக்கிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கும் என இப்பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இது மாணவர்களின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும்.
பொருளாதாரத்தினை மேம்படுத்தும்
முன்னாள் ராணுவ அதிகாரியான இந்த பள்ளியின் நிறுவனர், தலைவர், தலைமை செயல் அதிகாரி அர்ஜூன் ராய், இது நமது பொருளாதாரத்தினையும் மேம்படுத்த உதவும் என தெரிவித்துள்ளார். இது ஹைத்ராபாத் பள்ளிகளில் பயன்படுத்துவது முதல் முறை என்றாலும், இண்டஸ் அவற்றை உருவாக்கும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது.
மற்ற பள்ளிகளுக்கு வழங்க திட்டம்
இந்தியா முழுவதும் உள்ள பல பள்ளிகளுக்கும் இந்த ரோபோக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இப்பள்ளியின் இண்டஸ் இண்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அபர்ணா அச்சந்தா தெரிவித்துள்ளார்.
Lessons in 30 languages with robots: Hyderabad school’s wacky initiative
Lessons in 30 languages with robots: Hyderabad school’s wacky initiative/ரோபோ டீச்சர்.. அசத்தும் ஹைதராபாத் தனியார் பள்ளி..!