100 ரூபா எடுக்க போன இடத்தில் 2,700 கோடி.. ஜன் தன் வங்கி கணக்கில் அதிசயம்..!

தினக்கூலி செல்லும் ஒரு தொழிலாளி, இன்று வேலைக்கு சென்றால் தான் அடுத்த நாள் செலவுக்கு பணம் என்ற நிலையில் உள்ளவருக்கு, 2700 கோடி ரூபாய் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

உண்மை தான். உத்தரபிரதேச தொழிலாளியின் வங்கிக் கணக்கில் தான் இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக நம் வங்கிக் கணக்கில் பணம் எடுத்த பிறகு, அதற்காக வரும் எஸ் எம் எஸ் -ல் 500 ரூபாய் அதிகம் இருந்தாலே அடுத்த நொடியே மீண்டும் இது உண்மை தானா? என ஏடிஎம்மில் சென்று செக் செய்வோம். இது எப்படி வந்தது என பார்ப்போம்.

இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 6 லட்சம் அதிகரிப்பு.. ஒரே ஒரு காரணம் தான்..!

பிஹாரி லாலுக்கு ஏற்பட்ட அனுபவம்

பிஹாரி லாலுக்கு ஏற்பட்ட அனுபவம்

ஆனால் தன்னுடைய கணக்கில் இருக்கும் வெறும் 100 ரூபாய் தொகை எடுக்க சென்ற ஒருவருக்கு, உங்கள் கணக்கில் பல ஆயிரம் கோடி பணம் இருப்பதாக எஸ் எம் எஸ் வந்தால், உங்கள் எப்படி இருக்கும். அது சந்தோஷமா? பயமா? பல ஆயிரம் கேள்விகள் என எழலாம். அப்படி ஒரு அனுபவம் தான் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிஹாரி லால் என்பவருக்கு வந்துள்ளது.

ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.2700 கோடி

ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.2700 கோடி

தினசரி கூலிக்கு சென்று வரும் பிஹாரி லால், 45 வயதானவர். இவர் ஒரு செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு பாங்க் ஆப் இந்தியாவில் ஜன் தன் வங்கிக் கணக்கு இருந்துள்ளது. தனது கணக்கில் இருக்கும் 100 ரூபாய் தொகையினை எடுக்க நினைத்தவருக்கு, பணம் எடுத்த பின்னர் வந்த மெசேஜில் 2700 கோடி ரூபாய் பணம் இருப்பு உள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.

வங்கியில் என்ன சொன்னார்கள்?
 

வங்கியில் என்ன சொன்னார்கள்?

இதனால் அதிர்ச்சியடைந்த பிஹாரி லால், உடனடியாக வங்கியின் சென்று, தனக்கு வந்த மெசேஜினை காண்பித்துள்ளார். வங்கி அதிகாரிகளே இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், ஒரு முறைக்கு பல முறை ஸ்டேட்மெண்ட் எடுத்து செக் செய்துள்ளனர். பிஹாரியின் கணக்கில் 27,07,85,13,985 கோடி ரூபாய் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி கூலி தொழிலாளி

தினசரி கூலி தொழிலாளி

பிஹாரியோ தினசரி செங்கல் சூளைக்கு பணிக்கும் செல்லும் ஒரு கூலி தொழிலாளி. அவரின் சம்பளம் தினசரி 600 – 800 ரூபாய் மட்டுமே. அதுவும் தற்போது மழையின் காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியிள்ளார். அப்போது ஏதேச்சையாக தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தபோது 2700 கோடி ரூபாய் இருந்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இதனை வங்கியிலும் சென்று உறுதி செய்து கொண்டுள்ளார். ஆனால் பிஹாரி-யின் சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை எனலாம். ஏனெனில் அவரின் ஜன் தன் வங்கி கணக்கில் 126 ரூபாயாக இருந்துள்ளது. இது டெக்னிக்கலாக ஏற்பட்ட ஒரு பிரச்சனை என்று வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Uttar Pradesh laborer withdraws Rs 100 from ATM, finds Rs 2700 in bank account

Uttar Pradesh laborer withdraws Rs 100 from ATM, finds Rs 2700 in bank account/100 ரூபா எடுக்க போன இடத்தில் 2,700 கோடி.. ஜன் தன் வங்கி கணக்கில் அதிசயம்..!

Story first published: Thursday, August 4, 2022, 13:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.