புதுடில்லி : இந்தியாவில் பண மோசடிகளால், கடந்த மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக, சமூக ஊடக தளமான, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடிகளில் சிக்கியவர்களில், 17 சதவீதம் பேர், அவர்கள் இழந்த பணத்தை மீட்டுள்ளனர். கிட்டத்தட்ட 74 சதவீதம் பேருக்கு, இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய ஆய்வில், 29 சதவீதம் பேர், அவர்களது ஏ.டி.எம்., ரகசிய எண் உள்ளிட்ட பல தகவல்களை, குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது. மேலும், நான்கு சதவீதத்தினர், உடன் பணியாற்றுபவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக
தெரிவித்திருந்தது.வங்கி கணக்கு, கார்டுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருப்பது, பண மோசடிகளுக்கு முக்கிய காரணமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement