Redmi Tablet Leaked: பயனர்களுக்கு குறைந்த விலையில் ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளை வழங்குவதில் சியோமி நிறுவனம் முதன்மையாக திகழ்கிறது. இவர்களின் ரெட்மி பிராண்ட் இந்த தேவையை அதிகளவில் பூர்த்தி செய்கிறது. தற்போது, நிறுவனம் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்கிறது.
சமீபத்தில் சியோமி தனது பிரீமியம் டேப்லெட்டுகளை வெளியிட்டது. ஆனால், ரெட்மி தொகுப்பில் இருந்து வரும் புதிய டேப்லெட் பட்ஜெட் பட்டியலில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த டேப்லெட் FCC பதிவு தளத்தில் காணக் கிடைத்தது.
மேலதிக செய்தி:
iQOO Vs OnePlus: ஐக்யூ 9டி 5ஜி போனை விட சிறந்ததா ஒன்பிளஸ் 10 ப்ரோ; வாங்க பாக்கலாம்!
புதிய டேப்லெட் “Xiaomi 22081283G” என்ற குறியீடு எண்ணுடன் காணப்பட்டது. இதில் 7,800mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்கின் கொண்டு இயங்கும் எனத் தெரியவந்துள்ளது.
ரெட்மி டேப்லெட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (Redmi Tablet Leaked specs)
இதன் திரை 10.61 அங்குல ஐபிஎஸ் எல்சிடி பேனல் ஆக இருக்கும். இந்த திரையின் ரெப்ரெஷ் ரேட் 60Hz ஆகும். நம்ப முடியாத அளவு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரலாம் என்று கூறப்படுகிறது.
கசிந்த தகவல்களின்படி, நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை சக்தியூட்ட 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கலாம். மேலும், இந்த டேப்லெட்டில் 5ஜி ஆதரவு, வைஃபை 802.11 ac ஆகியவை கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்தி:
Jio Recharge: தினசரி 2ஜிபி டேட்டா; ஓடிடி நன்மைகள் – ஜியோவின் சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்கள்!
5ஜி பொருத்தவரை, நடுத்தர குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பயன்படுத்தப்படலாம். ரியல்மி நிறுவனம் சமீபத்தில் கொண்டுவந்த Realme Pad X 5G டேப்லெட்டுடன், வரவிருக்கும் ரெட்மி டேப் நேரடியாக மோதும். சந்தையில் ரியல்மி, சியோமி ஆகிய நிறுவனங்கள் இந்த வகை கேட்ஜெட்டுகளில் கடுமையான போட்டியை சந்திக்கும்.
Nokia: வெறும் ரூ.4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியாவின் 4ஜி போன்!
ரெட்மி டேப்லெட் விலை (Redmi Tablet Price in India)
கேமராவைப் பொருத்தவரை, பின்பக்க 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படும். செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இருக்கும். நிறுவனத்தின் பிரத்யேக ஸ்டீரியோ அம்சமும் இதில் கிடைக்கும் என்பதை நம்பலாம்.
மேலும், சியோமி போன்களில் மக்கள் பெரிதும் விரும்பும் IR Blaster அம்சமும் இந்த டேப்லெட்டில் இருக்கும். சீனாவில் இதன் விலை CNY 1,500 ஆக நிர்ணயம் செய்யப்படும் எனக் கணிப்புகள் கூறுகின்றன. இதுவே, இந்திய மதிப்பில் ரூ.20,000 ஆக இருக்கிறது.