நொய்டா: ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம் செய்ய உள்ளனர். நாட்டில் ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டும் வீரர்களை சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள திக்ரியில் விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் பேசுகையில், ‘அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான விவசாயிகளின் பிரசாரம் வரும் 7ம் தேதி முதல் தொடங்குகிறது. ஒரு வாரத்துக்கு இந்த பிரசாரம் நடத்தப்படும்,’ என அறிவித்தார்.