சென்னை: வரும் 7-ம் தேதி ஃபிளிப்கார்ட் தளத்தில் Gizfit அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய தலைநகர் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது Gizmore நிறுவனம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் அக்சஸரீஸ் மற்றும் ஆடியோ சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். அந்த வகையில் தங்கள் நிறுவனத்தின் அண்மைய வரவாக Gizfit அல்ட்ரா எனும் ஸ்மார்ட்வாட்ச்சை இப்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அப்படியே சதுர வடிவ டயல் கொண்ட ஆப்பிள் வாட்ச் போல அசப்பில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் போன்றவற்றில் இந்த வாட்ச் அசத்துகிறது.
சிறப்பு அம்சங்கள்:
1.69 இன்ச் ஹெச்.டி கர்வ் டிஸ்பிளே, சூரிய ஒளி வெளிச்சத்தில் தானியங்கு முறையில் பிரைட்னஸ் கொள்ளும் திறன், தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஐபி68 ரேட்டிங், 60 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், 3 விதமான கேம்கள் இந்த வாட்ச்சில் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
தூக்கம் மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, பல்ஸ் ரேட் போன்றவற்றை கணிக்கும் சென்சார்களை கொண்டுள்ளது இந்த வாட்ச். அலெக்சா மற்றும் ஆப்பிள் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட்டை கொண்டுள்ளது இந்த வாட்ச்.
இதன் விலை ரூ.2,699 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அறிமுக விலையாக ரூ.1,799 கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி முதல் இந்த வாட்ச் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.