இந்தியாவில் ஒரே நாளில் 20,551 பேருக்கு கொரோனா… 70 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 20,551 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,07,588 ஆக உயர்ந்தது.* புதிதாக 70 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 526600 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,595 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 43445624 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 135364 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 2,05,59,47,243 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 36,95,835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.