இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள துப்பாக்கி கலாசாரம் – இரண்டு மாதங்களில் 23 பேர் பலி


இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள துப்பாக்கி கலாசாரம்  - இரண்டு மாதங்களில் 23 பேர் பலி | 23 Shooting Incidents In The Last2 Months

நேற்றைய தினம் மாத்திரம் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்
கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், லுனுகம்வெஹேர மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்றிருந்த இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.