புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் 1.29 கோடி பேர் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நடந்த சட்டபேரவை, மக்களவை தேர்தல்களில் பதிவான நோட்டா வாக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்), தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. இதில், மொத்தம் 1.29 கோடி நோட்டா வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதில், சட்டப்பேரவை தேர்தல்களில் சராசரியாக 64 லட்சத்து 53 ஆயிரத்து 652 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன. மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக பீகாரின், கோபல்கஞ்ச் (தனி) தொகுதியில்தான் அதிகபட்சமாக 51 ஆயிரத்து 660 நோட்டா பதிவாகியது. 2020ம் ஆண்டு நடந்த பீகார், டெல்லி சட்டபேரவை தேர்தலில் 1.46 சதவீத நோட்டா (7,49,360 வாக்குகள்) பதிவானது. பீகாரில் 7,06,252 நோட்டாவும், டெல்லியில் 43,108 நோட்டாவும் பதிவானது தெரிய வந்துள்ளது.