இந்தியாவில் பணவீக்க விகிதமானது அச்சுறுத்தும் விதமாக 7% மேலாக இருந்து வரும் நிலையில், கட்டாயம் இந்த முறையும் வட்டி விகிதம் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதனைபோல ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையினால் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கி கூட்டம் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கிய நிலையில் மூன்றாவது நாளாக இன்று முடிவடையவுள்ளது.
இதற்கிடையில் மூன்றாவது நாள் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், சர்வதேச அலவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரெபோ விகிதம் அதிகரிப்பு
இதற்கிடையில் மூன்றாவது நாள் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்பார்த்ததை போல வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.4% ஆக அதிகரித்துள்ளது.
மற்ற விகிதங்களின் நிலவரம்?
இதே எஸ்டிஎஃப் விகிதம் (SDF) 5.15% ஆக உள்ளது. இதே MSF மற்றும் வங்கி விகிதம் 5.65% ஆக மாற்றப்பட்ட்டுள்ளது. ரெபோ விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் 2019க்கு அதிகமாகும்.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பணவீக்க விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. இதனால் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகரத் தொடங்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 13.3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
கடன் விகிதம்?
மத்திய வங்கியின் வட்டி விகிதமானது அதிகரித்துள்ள நிலையில், விரைவில் கடந்தகளுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மாத தவணை செலுத்துவோருக்கு இன்னும் கூடுதல் சுமையை தரலாம். புதியதாக கடன் வாங்குவோரும் அதிக வட்டி விகிதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.
RBI monetary policy meet today: Again the RBI hiked the repo rate by 0.5%
RBI monetary policy meet today: Again the RBI hiked the repo rate by 0.5%/கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் 0.5% வட்டி விகிதம் அதிகரிப்பு..!