கோவில்பட்டியில் காதலை கண்டித்த அரசு கல்லூரி பேராசிரியரை தாக்கியதாகக் கூறி, 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன், சக மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணித பேராசிரியர் சிவசங்கரன், அவர்களை கண்டித்ததோடு, இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரடைந்த மாணவன், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பேராசிரியர் சிவசங்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பேராசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட 2 மாணவர்களை மட்டுமே இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில் 4 மாணவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM