தொடரும் கனமழை… தமிழகத்தில் இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையமும் கூறியுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்ட நிர்வாகமே முடிவெடுக்கலாம்: தமிழக  அரசு | District administration can decide Holidays for schools and  colleges, Government of Tamil Nadu announces ...
இதைக்கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலுள்ள பள்ளிகளுக்கு இன்று (05.08.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போலவே கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையால் நீலகிரியில் நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் அம்ரித். இதேபோல வால்பாறை வட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு போலவே கேரளாவிலும் திருச்சூர், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.