மின்கட்டணம் தொடர்பாக நான் தான் முதலில் பேசினேன். பாஜக தொண்டர்கள் இது தொடர்பாக எந்த கருத்தை பதிவு செய்தாலும் அதற்கு நான் பொறுப்பு என் தொண்டர்களை விடுங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அக்கட்சியின் ஊழல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல குற்றசசாட்டு மற்றும் ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்
இதனால் செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் சமீபத்தில் தமிழகத்தில் மின் கண்டனம் உயர்த்தப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் மின் துறையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட உள்ளதாகவும், கூறிய அண்ணாமலை சமீபத்தில் சில ஆதாரங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் உயர்வு தொடர்பாக பாஜவை சேர்ந்த தொண்டர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற கருத்துக்களை பரப்புபவர்கள் மீது சட்டசப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார்
இந்நிலையில். இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, மின் கட்டணம் உயர்வு குறித்து நான்தான் முதலில் கூறினேன். என் தொண்டர்களை விட்டுவிடுங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள். என் தொண்டர்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு முழு பொறுப்பு நாள்தான். இன்னும் 4 நாட்கள் சென்னையில் தான் இருப்பேன் முடிந்தால் என் மீது கை வைத்து பார்க்கட்டும்.
தைரியம் இருந்தால் முதலில் என் மீது கை வைக்கட்டும் என்று கூறியுளளார். மேலும் தமிழகத்தின் கடன் 6 லட்சம் கோடியை கடந்துள்ளது திமுக இனியும் அரசியல் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். முன்னதாக பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழக அமைச்சர்கள் வெளிநடப்பு செய்தது தொடர்பாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil