தங்கம் விலையானது கிட்டதட்ட 1 மாத ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க வேண்டிய நல்ல வாய்ப்பினை மிஸ் செய்து விட்டோமோ என்ற எண்ணத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்ந்து வட்டி அதிகரிப்புக்கு மத்தியிலும் டாலரின் மதிப்பானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், அது தங்கம் விலை ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
மத்திய வங்கியானது பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகித்தத்தினை குறைக்க வழிவகுத்தாலும், அது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்வு: பங்குச்சந்தையில் என்ன தாக்கம்?
சர்வதேச அளவிலான முக்கிய காரணிகள்?
உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனையானது ஏற்கனவே, தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுதத்தியது. இதன் எதிரொலியாகத் தான் கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலையானது 2000 டாலர்களை தொட்டது. தற்போது சீனா தைவான் இடையேயான பிரச்சனையே என்பது, விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.
முதலீட்டு தேவை அதிகரிக்கலாம்
தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவி பதற்றமான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, பாதுகாப்பான முதலீடாக மாறக் கூடும். ஆக முதலீட்டு ரீதியாக தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
இந்திய சந்தையில் என்னவாகும்?
அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் ரெப்பொ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடம்
டாலரின் மதிப்பானது சற்று தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பத்திர சந்தையும் சற்று பின் வாங்கத் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது வட்டியில்லா முதலீடாக இருந்தாலும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
பேங்க் ஆப் இங்கிலாந்து
27 வருடங்களுக்கு பிறகும் பேங்க் ஆப் இங்கிலாந்து அதன் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் அழுத்ததினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1.35 டாலர்கள் குறைந்து, 1805.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை சற்று அதிகரித்து 20.185 டாலராக அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, 10 கிராமுக்கு, 57 ரூபாய் குறைந்து, 52108 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து,58,082 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை சர்வதேச சந்தையின் எதிரொலியாக குறைந்து காணப்படுகின்றது. எனினும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுமகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 4865 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 38,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 43 ரூபாய் அதிகரித்து, 5307 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,456 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,070 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 40 பைசா அதிகரித்து. 63.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 636 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 63,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,650
மும்பை – ரூ.48,650
டெல்லி – ரூ.47,800
பெங்களூர் – ரூ.47,700
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,650
gold price on 5th August 2022: Gold price touch near one month amid softer dollar
gold price on 5th August 2022: Gold price touch near one month amid softer dollar/நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமோ.. தங்கம் விலை எவ்வளவு ஏற்றம்.. இனியும் அதிகரிக்குமா?