ஜேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள வனப்பகுதி ஒன்றில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் முதல் பல்வேறு வெடிப்பொருட்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தில் நேற்று திடீரென தீப்பற்றியது.
பெர்லினில் உள்ள Grunewald என்ற இடத்தில் புகழ்பெற்ற வனப்பகுதி ஒன்று அமைந்துள்ளது. நாட்டுக்குள் அமைந்துள்ள இந்த வனப்பகுதி, பெர்லின் நகருக்கு அழகு சேர்க்கும் பசுமையான ஒரு இடமாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில், அந்த வனப்பகுதியில், ஓரிடத்தில் வெடிபொருட்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை அந்த இடத்தில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து அந்த வனப்பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடிக்க, காட்டுத்தீ உருவாகியுள்ளது.
140க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் அந்த இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
Photo: picture alliance/dpa | Beate Schleep
ஆனால், அந்த இடத்தில் வெடிப்பொருட்கள் இருப்பதால், இடையிடையே அவை வெடிப்பது தீயை அணைப்பதற்குத் தடையாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. அப்பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அந்த வனப்பகுதிக்குச் செல்லவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள இடத்திலுள்ள வெடிப்பொருட்களை அகற்றுவதற்காக இரணுவம் போர் வாகனங்கள் மற்றும் ரோபோக்களை அனுப்பியுள்ளது, ட்ரோன்கள் சம்பவ இடத்தைச் சுற்றிப் பறந்து சூழ்நிலையை தெரியப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், பெர்லின் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த பயங்கர தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவரவில்லை.
Hier sieht man die Explosionen im Grunewald. Aufgenommen vom Dach des Corbusierhauses in Westend von Haustechniker Michael von Rein. #explosion #Berlin #grunewald pic.twitter.com/vA8Q93zsDk
— rbb 88.8 (@rbb88acht) August 4, 2022