மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியோக வரிசைகள் ஒழுங்கு செய்யப்பட்டு (04) திகதி எரிபொருள் வழங்கப்பட்டது.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பெண்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருந்து சிரமத்தை எதிர்நோக்கி எரிபொருளை பெற்றுக்கொள்ள நேர்ந்தமையினால், பெண்களுக்கென தனியான வரிசையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.