பாங்காக்,-தாய்லாந்தில் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 40 பேரில், 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில் உள்ள, ‘த மவுன்டன் பி பப்’ என்ற மதுபானக் கூடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு பெண்கள் உட்பட 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; பலத்த காயம் அடைந்த நிலையில் 40 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றில், 2009ல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 66 பேர் பலியாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement