கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மியூச்சுவல் பண்ட் குறித்த விழிப்புணர்வுகள் அதிகமாகி வருகின்றன. வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்தால் அதிகபட்சமாக 6 சதவீதம் வட்டி மட்டுமே கிடைத்து வரும் நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முறையில் முதலீடு செய்தால் வருடத்திற்கு குறைந்தது 10 முதல் 12% வருமானம் கிடைத்து வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
எனவே ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் SIP என்ற வகை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மொத்தமாக முதலீடு செய்யும் லம்ப்சம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகளை செபி மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்யும் ஜெர்மனி.. எதற்காக தெரியுமா?
மியூச்சுவல் ஃபண்ட் விதிகள்
சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) இன்சூரன்ஸ் பாலிசிகளின் பயனாளிகள் சார்பாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களுக்கு “அசோசியேட்” என்ற வரையறையின் பொருந்தக்கூடிய தன்மையை அகற்ற மியூச்சுவல் ஃபண்ட் விதிகளை திருத்தியுள்ளது.
செப்டம்பர் 3 முதல்
செபியால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி திருத்தப்பட்ட புதிய விதிகள் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. ஒழுங்குமுறை வாரியம் கடந்த மாதம் திருத்தங்களுக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது என கூறப்படுகிறது.
செபி
இன்சூரன்ஸ் பாலிசிகள் அல்லது பிற திட்டங்களின் பயனாளிகள் சார்பாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களுக்கு “அசோசியேட்” என்ற வரையறை பொருந்தாது” என்று செபி கட்டுப்பாட்டாளர் கூறினார். இதனால் எந்த அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“அசோசியேட்”
செபி விதிகளின் கீழ், “அசோசியேட்” என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தன்னால் அல்லது உறவினர்களுடன் இணைந்து, அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC) அல்லது அறங்காவலர் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் ஒரு நபரை உள்ளடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்
தற்போது, 43 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கிட்டத்தட்ட ரூ.38 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கின்றன என்றும், இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mutual Fund Rules are Changed by SEBI, Check What New Regulations?
Mutual Fund Rules are Changed by SEBI, Check What New Regulations? மியூச்சுவல் ஃபண்ட் விதிகளை மாற்றிய செபி… முதலீட்டில் தாக்கம் ஏற்படுமா?